கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில், இலங்கை பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணப் பைகளில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக மலர்ச் செடிகளைக் கொண்டு வர முயன்ற பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பேங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான UL 403 விமானத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கை பெண் கைது
குறித்த பயணி, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் இலங்கை சுங்கத்தின் அதிகாரிகளால் பசுமை வழித்தடத்தில் வைத்து இடைமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டார்.

1993 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தாவரப் பாதுகாப்புச் சட்டத்திற்கமைய, தாவரங்கள் அல்லது அதன் பாகங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் மற்றும் ஏற்றுமதி செய்யும் நாட்டிலிருந்து குறித்த தாவரங்கள் பூச்சிகளற்றவை என்பதையும், அனைத்து தனிமைப்படுத்தல் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளன என்பதையும் உறுதிப்படுத்தும் சான்றிதழ் அவசியமாகும்.
தண்டனைக்குரிய குற்றமாகும்
இந்த நிபந்தனைகளுக்கு புறம்பான எந்தவொரு இறக்குமதியும் சட்டவிரோதமான செயல் என்பதுடன், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என சுங்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விசாரணைகளை தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட மலர்ச் செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த பயணிக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட தாவரங்கள், அழிப்பதற்காக விமான நிலைய தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan