பின்லாந்தில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண்
பின்லாந்தில் இலங்கை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலை தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த பெண்
உயிரிழந்த பெண் தனது குடும்பத்துடன் நீண்ட காலமாக பின்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை குடும்பத்தின் வீட்டுக்குச் சென்ற அயலவர் வீட்டின் கதவுக்கு அருகில் பெரிய இரத்தக்கறை இருப்பதை முதலில் கண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
பின்னர் அவர், குறித்த பெண் உயிரிழந்து கிடப்பதைக் கண்டதாகவும், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri