பிரித்தானியாவில் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை பெண்

Dhayani
in ஐக்கிய இராச்சியம்Report this article
பிரித்தானியாவில் குடிபெயர்ந்த இலங்கை பெண் ஒருவர் பிரித்தானிய நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட 34 வயதான ஆயிஷா என்ற பெண்ணே இவ்வாறு உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
வேல்ஸில் உள்ள கடுமையான குற்றவியல் வழக்குகளை முக்கியமாகக் கையாளும் கிரவுன் நீதிமன்றத்தில் வெள்ளையர் அல்லாத மற்றும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மிகவும் இளம் நீதிபதியாகியாக ஆயுஷா உள்ளார்.
இவர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ அறிவியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்து ஹாரோகேட் மாவட்ட மருத்துவமனையில் நோயியல் நிபுணராகப் பணியாற்றியுள்ளார்.
பாரிஸ்டராக பணியாற்றிய அவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சாதி, இனம், நிறம், வயது போன்றவற்றின் தாக்கம் வெற்றியில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
