மில்லியன்கணக்கான தங்கத்தை இந்தியாவிற்கு கடத்திய இலங்கையர்
சட்டவிரோதமான முறையில் 65 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு சென்ற இலங்கையர் ஒருவர் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வைத்திருந்த தங்கத்தின் எடை ஒரு கிலோவுக்கும் அதிகம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்ப் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பஹ்ரைனில் இருந்து வந்த 33 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இலங்கையர் தொடர்ந்து இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளுக்குச் சென்று தங்கம் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி அன்று, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்துடன் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் 42 வயதான சூடான் பெண்ணும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri