சென்னைக்கு புறப்பட்ட 5 நிமிடங்களில் திடீரென தரையிறங்கிய இலங்கை விமானம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் மதுரை நோக்கி இன்று (28) பிற்பகல் புறப்பட்ட இலங்கை விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட 5 நிமிடங்களில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விமானம் பிரான்சில் தயாரிக்கப்பட்ட Airbus-321 Neo ரக விமானம் ஆகும், இதில் 41 பயணிகள் மற்றும் 08 பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர்.

திடீரென தரையிறக்கப்பட்ட விமானம்
இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மதியம் 02.02 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டு 05 நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 02.07 மணியளவில் தரையிறங்கியுள்ளது.

மேலும் விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், விமானம் பழுது நீக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த விமானம் இந்தியாவின் மதுரைக்கு மீண்டும் புறப்படும் சரியான நேரத்தை விமான நிலையம் அறிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri