தமிழ்த்தேசிய சக்திகளுக்கு ஈரான் விவகாரத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தும் அரசியல் ஆய்வாளர்!
தமிழ்த் தேசிய சக்திகள் ஈரான் விவகாரத்தை வலிமையான நிலையில் உரையாடலுக்கு உட்படுத்துவதே இன்றைய நிலையில் மிகவும் அவசியமானது என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாரம் வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இதனை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், “இம்மாதம் 10ம், 11ஆம் திகதிகளில் பாகிஸ்தானின் அனுசரணையில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பாகிஸ்தானில் இடம் பெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இது முறிவடையும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். யுத்தம் மூலம் சாதிக்க முடியாதவற்றை பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்கா அடைய முற்பட்டது.
ஈரான் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அணுச் செறிவூட்டல் விவகாரமும், ஹார்மூஸ் நீரிணையில் ஈரானின் இறைமை தொடர்பான விவகாரமுமே முக்கியமாக பேச்சுவார்த்தை முறிவிற்க்கு காரணமாக அமைந்தன.
ஈரானின் 10 அம்சத்திட்டம்..
ஈரான் இந்த இரண்டு விடயங்களிலும் மிகவும் இறுக்கமாக நின்று கொண்டது. ஈரான் 10 அம்சத்திட்டத்தையே முக்கியமாக முன்வைத்தது.

தாக்குதல் நடாத்தப்படாது என்பதற்கான உறுதி மொழி, ஹார்மூஸ் நீரிணையில் ஈரானின் இறைமையை அங்கீகரித்தல், யுரேணியம் செறிவூட்டும் உரிமை, பொருளாதாரத் தடை நீக்கம், பிறநாடுகளுடனான வர்த்தகத் தடை நீக்கம், ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்களை இரத்துச் செய்தல், அணுசக்தி முகாமையின் தீர்மானங்களை இரத்து செய்தல், போர் இழப்பீடு, அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கிலிருந்து விலகல், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் என்பனவே அப் பத்து அம்சத்திட்டத்தில் அடங்கியிருந்தன.
போரை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வருவது எனத் தெரியாத நிலையிலேயே அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு வந்தது. போரை நிறுத்தா விடில் உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
சர்வதேச அழுத்தங்கள் அமெரிக்காவுக்கு அதிகரித்திருந்தன. இதனால் ஏதோ ஒரு வகையில் போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam