தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை மௌனிக்கச் செய்த 22 நாடுகள்.. தவிசாளர் மதிமேனன் பகிரங்கம்
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை 22 நாடுகள் சேர்ந்து மௌனிக்கச் செய்திருந்தன என மட்டக்களப்பு - போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைத் தொகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (17.05.2026) நடைபெற்றது.
மக்களின் தியாகம்..
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "எமது உரிமைக்காகவும் தமிழ் மக்களின் இருப்புக்காகவும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் முகமாக அந்த மக்கள் இறுதி யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் உப்பில்லா கஞ்சியை அருந்தி இறந்தவர்கள் போக ஏனையர்வர்கள் அவர்களது உயிர்களை காப்பாற்றி இருந்தார்கள்.
அவ்வாறான மக்களை நாங்கள் வருடம் தோறும் அந்த மக்கள் எவ்வாறு வேதனைகளை அனுபவித்தார்களோ எவ்வாறு கஞ்சி அருந்தி அவர்களது உயிர்களை காப்பாற்றினார்களோ, அந்த நினைவு நாளை வருடம் தோறும் நாம் மக்களுக்கும்ம், எமது இளம் சமுதாயத்தினருக்கும் எடுத்தியம்பி கஞ்சிக வழங்கி நினைவுகூர்ந்து வருகின்றோம்” என்றார்.