யாழ். மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி!
யாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். மாநகர சபையின் பிரதி மேயர் துரைராஜா ஈசன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சபை உறுப்பினர்கள், மாவீரர்களுக்கு இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.
யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
மாவீரர்களுக்கு அஞ்சலி

இதன்போது, "எதிர்வரும் 21 ஆம்
திகதி முதல் நவம்பர் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இருப்பினும், யாழ். மாநகர சபையின் அடுத்த அமர்வு மாவீரர் நாள் முடிந்த பின்பே
வரவுள்ளதால் இன்றைய அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது
பொருத்தமாகயிருக்கும்" என்று பிரதி மேயர் ஈசன் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan