விடுதலைப்புலிகளின் கால பிக்குகள் குறித்து பலருக்கும் தெரியாத உண்மைகள் - அம்பிட்டிய தேரர் பற்றிய ஆதாரமும் அம்பலம்
விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளியிட்ட கருத்து தமிழர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
அவர் அண்மையில், "விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது ஒரு பௌத்த துறவி புகைப்படம் எடுத்ததை பார்த்ததுண்டா?
இல்லை, ஏனெனில் அவர் ஒரு பயங்கரவாதி, ஒழுக்கத்தோடு இருக்கும் நாங்கள் அவரொடு எல்லாம் சேரக்கூடாது” என கூறியிருந்தார்.
இந்நிலையில், இவர் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் ஈழத்தமிழர்கள் மத்தியில், கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. அண்மையில் சில தேரர்களின் அநாகரீகமான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேநேரம், மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் தமிழர்கள் தொடர்பில் மிக கடுமையான வார்த்தை பிரயோகங்களை முன்வைத்தவர் தான்.
தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வரும் இவர் தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவை உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan