மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோசடி
கிரிபத்கொட பகுதியில் அரச நிலத்தை மோசடியாக விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டு மற்றும் சட்டவிரோதமாக ரூ. 800 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தொடரப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகளில் மேர்வின் சில்வா சமீபகாலமாகச் சிக்கியுள்ளார்.

இந்த வழக்குகளுக்காக அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.