இலங்கையிலிருந்து அமெரிக்கா சென்ற செய்தி! டயஸ்போறாக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி (Video)
2021ஆம் ஆண்டு பயங்கரவாதம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கை, விடுதலைப்புலிகள் அமைப்புக்கள் மீதோ அல்லது புலம்பெயர்ந்து இருக்கக்கூடிய அமைப்புக்கள் மீதோ தடையாக அமைவதற்கு வாய்ப்பு இல்லையெனவும், ஆனால் அமெரிக்காவின் அறிக்கை ஈழத்தமிழர்களுக்கு எதிர்காலத்தில் பல்வேறுப்பட்ட தடைகளை ஏற்படுத்தும் என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகளுக்கும் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் இடையே சரியான ஒரு உறவுப்பாலம் இல்லை எனவும் சரியான வேலைத்திட்டங்கள் பங்கிடப்படாமல் சரியான புரிதல்கள் இல்லாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.




