பிரித்தானிய சிறையில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை தமிழர்! காரணம் வெளியானது
பிரித்தானியாவின் லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று அண்மையில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களே அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wormwood Scrubs சிறையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதி கேதீஸ்வரன் குணரட்னம் என்ற (Ketheeswaren Kunarathnam) என்ற இலங்கை தமிழர் தனது உயிரை மாய்த்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடாபில் சட்ட வைத்திய அதிகாரிகள் விசாரணை நடாத்தியிருந்தனர். இதன் போது உரிய பராமரிப்பு இன்மையினால் கேதீஸ்வரன் உயிரிழந்துள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவர் இறப்பதற்கு சில நாட்களாக உணவு உண்ண மறுத்து பட்டினியாக இருந்துள்ளதுடன், அவர் தற்கொலை தொடர்பில் தொடர்ச்சியாக பேசி வந்ததாகவும் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான சூழ்நிலையில், சிறைச்சலை ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் பரிசோதனை செய்ய தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் சித்திரவதைகளுக்கு அஞ்சி பிரித்தானியாவில் கேதீஸ்வரன் ஏதிலி அந்தஸ்து கோரி பிரித்தானியாவுக்கு வந்திருக்கிறார்.
அகதியாக வந்த அவர் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டு Wormwood Scrubs சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
உரிய பராமரிப்பு இன்மையினால் கேதீஸ்வரன் உயிரிழந்துள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறைச்சாலையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு அடிப்படை பயிற்சி இல்லை மற்றும் அதிக வேலை செய்யும் சிறை அதிகாரிகள் அவர் உணவை சாப்பிட மறுத்ததை பதிவு செய்யத் தவறிவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேதீஸ்வரன் புகலிடம் கோரி விண்ணப்பிக்கலாம் என்ற விடயத்தை அவரிடம் தெரியப்படுத்தப்படவில்லை எனவும், இது தொடர்பிலான ஆவணங்கள் மற்றும், தொலைபேசி அழைப்புகளுக்கு சரியாக பதிலளிக்கப்படவில்லையெனவும், கைதியின் கோரிக்கை தீர்க்கப்படவில்லையெனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பிரித்தானிய அதிகாரிகளின் மந்தமான போக்கினால் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாரதிராஜாவுக்கு தனது அஞ்சலியை செலுத்திய முதலமைச்சர் விஜய்.. அரசு மரியாதையுடன் இறுதி பயணம் Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri