இத்தாலியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை மாணவி!சந்தேகநபர் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்
இத்தாலியில் 17 வயதுடைய இலங்கை மாணவியை வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சக இலங்கை மாணவன் கொலைக்கான காரணத்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ரோமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 17 வயது இத்தாலிய மாணவியை கொன்று குப்பைகளை அகற்றும் பையில் உடலை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே வயதுடைய இலங்கை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மரியா மிச்செல் கோர்சோ என்ற பள்ளி மாணவியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சடலத்தை மறைப்பதற்காக குப்பை மேடு ஒன்றிற்கு எடுத்துச் சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் உயிரிழந்த மாணவி இத்தாலியில் பிறந்த இலங்கை தம்பதியரின் ஒரே குழந்தையெனவும் தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணம்
இத்தாலிய மாணவியும், மாணவனும் சில காலமாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த மாணவி உறவை முறித்துக் கொண்டமையால் ஏற்பட்ட விரக்தியில் இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டதாக இத்தாலி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாணவியின் உடலில் 6 கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 28ஆம் திகதி, ரோம் நகரில் உள்ள ப்ரிமாவல்லே பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள வீட்டில் 17 வயது இத்தாலிய மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவலையடுத்து, மாணவியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கத்தியை இத்தாலி பொலிஸார் நேற்று கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை ஊனமுற்றவர் என்பதால் ஊன்றுகோலின் உதவியோடு தான் நடப்பதாகவும், தனது மகளின் கொலைச் செய்தியைக் கேள்வியுற்ற அவர் சம்பவ இடத்துக்கு வந்து கதறி அழுததாகவும் ரஞ்சன் குறிப்பிடுகின்றார்.
சந்தேகத்திற்குரிய மாணவியின் தாய் மற்றும் தந்தை வென்னப்புவ, கட்டுனேரிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், மாணவர் இத்தாலியில் பிறந்தவர், எனவே அவர் இத்தாலிய குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
இந்த மாணவி தனது மகனுடன் காதல் உறவில் ஈடுபட்டமை தனக்கு தெரியும் என்றும், அவர் மிகவும் நல்ல பிள்ளையென்றும் அவரது தாயார் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
