பாலர் பாடசாலைச் செல்லும் குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்து! பெற்றோரே அவதானம்
இலங்கையில் பாலர் வகுப்புச் செல்லும் சிறு குழந்தைகள் அதிகமான சர்க்கரை சார்ந்த உணவுகளை உட்கொண்டு வருவதாக வைத்தியர் இனோகா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சுகாதார அமைச்சின் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வைத்தியர் இனோகா இது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
பெற்றோரே அவதானம்..
இது கறித்து வைத்தியர் மேலும் தெரிவிக்கையில்,
வயது வந்த ஒருவர் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளக் கூடிய சர்க்கரையின் அளவில் இருந்து அரைவாசியான சர்க்கரை அளவே சிறியவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எனினும், தற்போது சிறுவர்கள் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக காணப்படுகின்றது.
குறிப்பாக, பாலர் பாடசாலைகளின் கல்வி கற்கும் குழந்தைகளில் 60 சதவீதத்திற்கும் அதிமானோர் சர்க்கரைப் பானங்களை அருந்துவதற்கு பழகியுள்ளனர்.
பாடசாலை செல்லும் போதும் திரும்பி வரும் போது இந்த பானங்களை அருந்துவது அதிகரித்து காணப்படுகின்றது.
எனவே இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களிடத்தில் காணப்படுகின்றது.
பெற்றோர்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் இரண்டு வகையான காய்கறிகள், இரண்டு வகையான பழங்கள் மற்றும் ஒரு வகை கீரை போன்றவற்றை வழங்க வேண்டியது அவசியம் என்பதோடு குழந்தைகளை ஆபத்திலிருந்து தற்காக்கவும், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
