பிரித்தானியாவில் கடுமையான கட்டுப்பாடுகளால் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவைக்கு மிகப்பெரிய பணியாளர் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய அரசின் குடிவரவு திட்டம் காரணமாக தாதியர்கள் வேலையை விட்டுச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்றுள்ள அதிகமானவர்கள் சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.
வெளிநாட்டு தாதியர்கள்
அவர்களும் நேரடியாக பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரோயல் கொலேஜ் ஒப் நேர்ஸிங் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, 50,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தாதியர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் புலம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சமகால அரசாங்கம் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகள் இதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.