வெளிநாட்டில் உள்ள விமான நிலையத்தில் சிக்கிய முதியவருக்கு இலங்கையர்கள் செய்த உதவி
தாய்லாந்தின் பேங்கொக் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் சிக்கியிருந்த முதியவர் ஒருவர், சக இலங்கை பெண்களின் மனிதாபிமான உதவியுடன் நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி காலை 7.45 மணிக்கு UL404 விமானம் மூலம் இலங்கை திரும்புவதற்கு அந்த முதியவர் திட்டமிட்டிருந்தார்.
அதற்கமைய, அந்த முதியவர், விமான நிலையத்திற்கு வந்த போது வாடகை வாகனத்தில் தனது கடவுச்சீட்டு, விமான டிக்கெட் மற்றும் பணம் அடங்கிய பையை மறந்து வைத்துவிட்டு இறங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
இது குறித்து அவர் உடனடியாக விமான நிலைய பொலிஸாருக்கும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்களுக்கும் அறிவித்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முகாமையாளரின் ஆலோசனையின் பேரில், பேங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்ற அந்த முதியவர், தற்காலிக கடவுச்சீட்டு ஒன்றை பெற்றுக்கொள்ள கோரியுள்ளார்.
அங்கு கடமையிலிருந்த அதிகாரி, அவரை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்ததுடன், அதற்காக 4,950 தாய் பாட் பணத்தை உடனடியாக செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
வங்கி மூலம் பணம் செலுத்துவதற்கான கோரிக்கையை நிராகரித்த அந்த அதிகாரி, ரொக்கப் பணத்தையே கோரியுள்ளார்.
பெண்ணின் உதவி
அந்த சமயத்தில், அவரிடம் வெறும் 200 பாட் மட்டுமே இருந்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், அங்கு வந்திருந்த மஹரகமவை சேர்ந்த, தற்போது தாய்லாந்தில் வசிக்கும் மதுஷானி நவரத்ன என்ற இலங்கை பெண், முதியவரின் நிலையைக்கண்டு, கடவுச்சீட்டுக்கான கட்டணம் மற்றும் ஏனைய செலவுகளுக்காக 6,000 பாட் பணத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இதையடுத்து, அந்தப் பணத்தைச் செலுத்தி தற்காலிக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு முதியவர் விமான நிலையத்திற்கு திரும்பும்போது, UL405 விமானம் புறப்படுவதற்கு 20 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே இருந்தது.
முதியவர் விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிலைய முகாமையாளர், மிக விரைவாகச் செயற்பட்டு, பாதுகாப்பு சோதனைகள் மற்றும் ஏனைய வழிமுறைகளைச் சுருக்கி, அந்த முதியவரை விமானத்தில் ஏற்றி அனுப்ப உதவியுள்ளார்.
இவ்வாறு இலங்கையர்களின் உதவியால் அந்த முதியவர் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளார்.
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam