இந்த வருடத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 7.6 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க டொலர்கள்
யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் , ஜப்பானிய யென், இந்திய ரூபாய் மற்றும் அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராகவும் இலங்கை ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 350 ரூபாவிற்கு மேல் காணப்பட்டது. எனினும் சமகாலத்தில் அது 300 ரூபாவுக்கும் கீழ் குறைந்துள்ளது.
அதிகளவான அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குள் உள்ளீர்த்துள்ளமை, சுற்றுலா துறையினரின் வருகையில் ஏற்பட்ட வளர்ச்சி, வாகன இறக்குமதிக்கான தடை என்பன இந்த மாற்றத்திற்கான பிரதான காரணம் என பொருளாதார துறை நிபுணர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.