மீண்டும் ஒருமுறை இந்திய நிதியமைச்சரை சந்தித்த இலங்கைப் பிரதிநிதி (photo)
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டின் கடன் மறுசீரமைப்பு
நேற்று (06.12.2022) இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கு இந்தியா
வழங்கிய அவசர உதவிக்கு இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளார்.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்துடனான, இலங்கையின் தற்போதைய கலந்துரையாடல்கள் மற்றும் நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய நிலை குறித்தும் இலங்கை உயர்ஸ்தானிகர், இந்திய நிதி அமைச்சருக்கு விளக்கமளித்ததாக புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி
தற்போதைய நெருக்கடியின் பின்னணியில் இந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இலங்கைக்கான உதவிகள் தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் சீதாராமனுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட நடத்திவரும் தொடர்ச்சியான சந்திப்புகளின் ஒரு கட்டமாகவே இந்த சந்திப்பும் அமைந்திருந்தது.
இந்தநிலையில், முதலீடுகள், சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதன்
மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக பொருளாதார ஒருங்கிணைப்பு, மற்றும்
இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பின் நிலை குறித்தும் இருவரும் ஆய்வு செய்தனர்
என்று இந்திய செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri