இந்திய கடற்பகுதியில் மீட்கப்பட்ட இலங்கைதமிழ் அகதி
தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் தவித்த தமிழகத்திற்கு அகதியாக சென்ற இலங்கைத் தமிழர் ஒருவரை இந்திய கடலோர பொலிஸார் நேற்று அதிகாலை (10) மீட்டு மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் மூன்றாம் மணல் திட்டில் இலங்கை தமிழர் ஒருவர் நிற்பதாக இந்திய கடலோர பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து இந்திய கடலோர பொலிஸார் முகாமுக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டிற்கு சென்று இந்திய கடலோர பொலிஸார் அங்கு கடற்றொழிலாளர்கள் கொடுத்த தகவலுக்கு அமைய நின்று கொண்டிருந்த இலங்கை தமிழரை மீட்டு தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து இலங்கை தமிழரை ராமேஸ்வரம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஒப்படைக்கப்பட்ட இலங்கை தமிழரை மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
படகு மூல பயணம்
விசாரணையில் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கியோசன் (28) என தெரியவந்தது. கடந்த 1990ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாக வந்த கியோசன் பெற்றோர்.
வேலூர் அணைக்கட்டு முகாமில் தங்கியிருந்த நிலையில் 1997ஆம் ஆண்டு கியோசன் தமிழகத்தில் பிறந்துள்ளார். பின்னர் 2012 ஆம் ஆண்டு கியோசன் அக்கா திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் இலங்கை சென்று மீண்டும் தமிழகம் வந்து தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இலங்கை மட்டக்களப்பில் கியோசன் அப்பாவுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்வதற்காக விமானம் மூலம் இலங்கை சென்றுள்ளார்.
நிலங்களை விற்று விட்டு மீண்டும் விமானம் மூலம் தமிழகத்திற்கு திரும்பி வர விசா கிடைக்காததால் கியோசன் சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகம் வருவதற்காக நேற்று (9) இரவு மன்னார் கடற்கரையில் இருந்து ரூ.50 ஆயிரம் கொடுத்து படகொன்றில் புறப்பட்டு நள்ளிரவு தனுஷ்கோடி மூன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளமை தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
