தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அகதிகள் முகாம்!
இந்தியாவில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் தடை செய்யப்பட்ட இடங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஓசூர் அருகே உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் கோவிட் தொற்றுக் காரணமாக தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த பகுதி மக்களுக்கு தண்டூரா மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது. குறித்த முகாமில் 145 குடும்பங்களை சேர்ந்த 528 பேர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த முகாமில் உள்ள 37 பேருக்கு கடந்த வாரத்தில் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் ஐவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 32 பேர் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ள பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ள வருவாய்துறையினர் உள்ளே செல்லவும், வெளியேறவும் தடை விதித்துள்ளனர்.