இலங்கை அகதி ஒருவர் தமிழக பொலிஸ் நிலையத்தில் செய்த காரியம்!
தமிழ்நாட்டில் உள்ள தாபதி புனர்வாழ்வு மையத்தில் 20 வயதான இலங்கை அகதி ஒருவர், பொலிஸ் விசாரணையின் போது, தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டிலுள்ள எட்டயபுரம் பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்றுள்ளது.
தொழிலில் ஓவியரான குறித்த இலங்கையர், 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியைப் பழனியிலுள்ள ஒரு கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே பொலிஸ் விசாரணை இடம்பெற்றுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
குறித்த விசாரணையின்போது இலங்கை அகதி, உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.
இதனையடுத்து,
அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பொலிஸ், அங்கிருந்து
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாக இந்தியன்
எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam