ஊழியர்கள் ஓய்வு - கடும் நெருக்கடியில் இலங்கை ரயில் சேவை
இலங்கையில் இன்று காலை திட்டமிடப்பட்டிருந்த 11 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில் சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரச்சினைக்கு இன்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இன்றும் 60க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படலாம் என முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இன்றைய தினம் கணிசமான எண்ணிக்கையிலான ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படலாம் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி சேனவிரத்னவிடம் மேற்கொண்ட விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ரயில்வே திணைக்களம் மேற்கொண்டு வருவதாக காமினி சேனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
