கிளிநொச்சி வீதி ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு...! (Video)
இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி வீதி ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பணிபகிஸ்கரிப்பு இன்றைய தினம் (03-03-2023 முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வீதியின் வருமானத்தைப் பாதிக்கும் வகையில் யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு வழித்தடத்தில் ஒரே நேரத்தில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு புல் மேட்டை ஊடாகத் திருகோணமலை செல்லும் எமது பேருந்துக்கு முன்னால் விசுவ மடுவிலிருந்து திருகோணமலைக்குத் தனியாருக்குச் சேவையாற்ற அனுமதித்துள்ளது.
இதுவரை காலமும் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கு சேவையாற்றும் படி கோரிக்கைகள் இருந்தும் இதுவரை இ.போ.சவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதுபோன்றப் பலவேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிபகிஸ்கரிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 23 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam