பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்து நட்புறவு பாராட்டிய இலங்கை ஜனாதிபதி
அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கான வெளிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனை சந்தித்துள்ளார்.
தேசிய எல்லைகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளின் சமுத்திர உயிரியல் பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிகழ்வின் போது இந்த சந்திப்பு இடம்பெற்று்ளளது.
சபையின் பிரகடன உடன்படிக்கையின் அங்கத்துவத்தில் 60 நாடுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, சிறப்பு நிகழ்வொன்றினை பிரான்ஸ் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
அரச தலைவர்கள்
இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரச தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடான இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்துகொண்டார்.
இதன்போது, பிரான்ஸ் ஜனாதிபதியுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam