கருணா தொடர்பில் பிள்ளையான் வெளியிட்ட தகவல் (VIDEO)
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட தளபதிகள் பலர் இருந்தனர் எனவும் அவர்களிடம் இருந்தும் அமைப்பில் இருந்தும் கிழக்கு மாகாணம் பிரிவதற்கு முதலில் அத்திவாரமிட்டவர் கருணா தான் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து முதலில் கருணா வெளியேறினார். அமைப்பில் இருந்து கிழக்கு மாகாணம் வெளியேறுகின்றது என்று இயக்கம் அறிவிக்கும் போது நான் குருநாகலில் இருந்தேன்.
அதன் பின்னர் கருணாவோடு ஒன்றாகச் சேர்ந்து அரசியல் செய்ய முடியாது என்ற அடிப்படையிலேயே நான் வெளியேறினேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல முக்கியமான அரசியல் செய்திகளை தொகுத்து வழங்குகி்ன்றது எமது அரசியல் பார்வை நிகழ்ச்சி,
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15