விக்னேஸ்வரன் நல்லவர்: கஜேந்திரன் குழப்பவாதி! நீதி அமைச்சர் கருத்து
"விக்கினேஸ்வரன் எம்.பி. நல்லவர். ஆனால், கஜேந்திரன் எம்.பி. குழப்பவாதி. இதை நான் வடக்கில் நேரில் கண்டேன்" என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வன்மையாகக் கண்டிக்கின்றோம் -விஜயதாச ராஜபக்ச

"வடக்கில் கடந்த வாரம் நடமாடும் சேவைகளை நடத்தினோம். இலங்கையிலிருந்து இந்தியா சென்று, மீண்டும் நாட்டுக்குத் திரும்பியுள்ள மக்களுக்காக நாம் இந்தச் சேவையை நடத்தினோம்.
மக்களின் நன்மை கருதியே நாம் இவற்றைச் செய்தோம். ஆனாலும், கஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட சிலர் அதைக் குழப்புவதற்கு முயற்சி செய்தனர்.
அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் என்னுடன் கலந்துரையாடி
ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்" என்றார்.