ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு : ரணிலின் உரையை கேட்க சபையில் எஞ்சியிருந்த நபர்கள்
ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் ஆரம்பித்துள்ளமை அவர்களது செயற்பாடுகளிலிருந்து தெரிய வருவதாக, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கட்சிக்குள் பிளவு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமது போராட்டத்துக்கு அடித்தார்கள், கண்ணீர் புகைக் குண்டுகளால் தாக்கியதாகத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் போது எழுந்து சென்றனர்.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியில் பிளவு ஏற்பட்டமையை அவர்களின் செயற்பாட்டில் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.
ஏனெனில் எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் சபையில் அமர்ந்துகொண்டே இருந்தனர். இவ்வாறான செயற்பாடுகளால் மக்களை ஏமாற்ற முடியாது என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 22 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
