மீண்டும் நாட்டை அழிக்கும் ஜே.வி.பி: தொடர்ந்தும் சீண்டும் மொட்டுக் கட்சி- செய்திகளின் தொகுப்பு
மக்கள் விடுதலை முன்னணி கடந்த 1988-89 ஆம் ஆண்டுகளில் செய்தது போல் நாட்டுக்குள் அழிவான நிலைமையை உருவாக்க முயற்சித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமல் சாந்த மயாதுன்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
1988-89 ஆம் ஆண்டுகளில் போன்ற துண்டுப்பிரசுரம் மூலம் கடைகளை மூடும் நிலைமை உருவாகி வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
பல்கலைக்கழக உபவேந்தர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனை நாங்கள் மிகவும் அருவருப்புடன் கண்டிக்கின்றோம்.
தெற்கில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குள் ஜே.வி.பி.மற்றும் முன்னிலை சோசலிசக்கட்சியினர் புகுந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை அழித்து வருகின்றனர்.
தற்போது நடைபெறும் சம்பவங்களுக்கு இந்த கட்சிகள் முற்றாக பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.
இவை தொடர்பான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,