பிரித்தானியாவில் தொடர்ச்சியாக மாயமாகும் இலங்கை விளையாட்டு வீரர்கள்! மேலும் ஏழு பேர் மாயம்
பிரித்தானிய - பேர்மிங்காமில் தங்கியுள்ள இலங்கையின் பொதுநலவாய விளையாட்டுக்குழுவின் பத்து உறுப்பினர்கள் பிரித்தானியாவில் தங்குவதற்கான சந்தேகத்திற்குரிய முயற்சியில் கீழ் காணாமல்போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது தடகள வீரர்களும் ஒரு மேலாளரும் தங்கள் நிகழ்வுகளை முடித்த பிறகு காணாமல்போயுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அவர்களில் மூவர் ஜூடோ வீராங்கனை சமிலா திலானி, அவரது முகாமையாளர் அசேல டி சில்வா மற்றும் மல்யுத்த வீரர் ஷனித் சதுரங்க ஆகியோர் கடந்த வாரம் காணாமல்போயிருந்தனர்.

இலங்கை அதிகாரிகள் இங்கிலாந்தில் முறைப்பாடு
இது தொடர்பில் இலங்கை அதிகாரிகள் இங்கிலாந்து பொலிஸில் முறையிட்டுள்ளனர். எனினும் இதன் பின்னர் , மேலும் ஏழு பேர் காணாமல்போயுள்ளனர் என்று இலங்கை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
வேலை வாய்ப்பைப் பெற அவர்கள் இங்கிலாந்தில் இருக்க விரும்புவதாக தாம் சந்தேகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
160 பேர் கொண்ட இலங்கைக் குழுவின் நிர்வாகம் அனைத்து உறுப்பினர்களின் கடவுச்சீட்டுகளையும் அவர்கள் வீடு திரும்புவதை உறுதிசெய்து வைத்திருந்தது.
எனினும் அது சிலரை வெளியேறுவதைத் தடுக்கத் தவறியுள்ளது.காணாமல்போன முதல் மூவரை பிரித்தானிய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் அவர்கள்
உள்ளூர் சட்டங்களை மீறவில்லை மற்றும் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்.விசாக்களை வைத்திருந்தமையால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை என்று இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri