சீனாவிலிருந்து நகர்ப்புறக்கழிவுகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் திட்டம்

Srilanka China Import
By Ajith May 30, 2021 07:11 PM GMT
Report

கார்போனிக் உரங்களை இறக்குமதி செய்யும் போக்கில் சீனாவிலிருந்து நகர்ப்புறக் கழிவுகளை வணிகர்கள் மூலம் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை ரசாயன உரத்தை விடக் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹெரத் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

"யூரியா தெளிப்பதன் மூலம் சீனா இந்த நகர்ப்புற கழிவுகளை கார்போனிக் உரமாகப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த நகர்ப்புற கழிவுகளையே சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனவே இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.இலங்கை மண் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இது ஆபத்தானது என்றும் அவர் கூறியுள்ளார்.

கார்போனிக் உரத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளுக்குத் தாம் எதிர்ப்பு இல்லை என்று கூறிய அவர் விவசாயிகளுக்கு கார்போனிக் உரத்தைப் பெறுவதற்கான முறையான வழிமுறையை அறிமுகப்படுத்திய பின்னர் ரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேயிலைத் தொழில் இன்று கடுமையான நெருக்கடியில் உள்ளது. சிங்கப்பூருக்கு தங்கள் பயிரை ஏற்றுமதி செய்த காய்கறி விவசாயிகள் தங்கள் சந்தையை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். கார்போனிக் உரங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்தின் மூலமும் அரசாங்கம் எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை.

கார்போனிக் உரங்கள் தொடர்பாக அரசாங்கம் 46 உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவை உருவாக்கியுள்ளது, அதில் அரசாங்கத்திற்கு ஓரளவு சார்பான வணிகர்களும் அடங்குகின்றனர்.

மேலும் கார்போனிக் உரங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அவர்களுக்கு ஒரு புதிய மாஃபியாவை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே விவசாயிகளுக்கு ஆபத்து ஏற்படாமல் நாட்டில் கார்போனிக் உரங்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US