திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய இலங்கை விமானம்
எரிபொருள் பற்றாக்குறையால் UL504 என்ற இலங்கை விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக நேற்று தரையிறங்கியுள்ளது.
இந்த விமானம் லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளை முடித்துக் கொண்டு திரும்பிய கிரிக்கெட் வீரர்களுடன் பறந்த நிலையில் இவ்வாறு தரையிறங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்குவதற்காக விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு துறைக்கு அவசர செய்தி அனுப்பினார்.
முதலில் ஓமானின் மஸ்கட்டின் விமானத்தை தரையிறக்க முயற்சிகள் செய்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக அங்கு விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
சூழ்நிலையை புரிந்துகொண்ட விமான நிலைய அதிகாரிகளின் உத்தரவின்படி தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்பு குழுவினர் உள்ளிட்ட அனைவரும் அடுத்த சில நிமிடங்களில் ஓடுபாதையில் அனைத்து வகையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் தயாராக நின்றனர்.
இதன் பின்னர் விமானத்திற்கு தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து எரிபொருள் நிரப்பிய பின்னர், பிற்பகல் 2.45 மணிக்கு மீண்டும் விமானம் கொழும்புக்கு பறந்தது. .
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri