நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), 2022 ஜூலை 13ஆம் திகதியன்று, நாட்டில் இருந்து மாலைத்தீவுக்கு தப்பிச்செல்வதற்கு இலங்கை விமானப்படை நிதியளித்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை இந்த பயணத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செலவு குறித்து இலங்கை விமானப்படை இன்னமும் வெளியிடவில்லை.
2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி, கொழும்பில் இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் இரண்டையும் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர்.
மாபெரும் போராட்டம்
இந்நிலையில், 2022 ஜூலை 13ஆம் திகதி, கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் அதிகாலையில் மாலைத்தீவுக்கு விமானப்படை விமானத்தில் புறப்பட்டார்.
அதன்போது, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி, நிறைவேற்று அதிகாரம், அரசாங்கத்தின் தலைவர் மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி என்ற அடிப்படையிலேயே, கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த விமான வசதிக்கு ஒப்புதல் வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
என்றபோதும், இந்த விமானப் போக்குவரத்தின் இரகசிய தன்மை காரணமாக ஒப்புதல் ஆவணத்தின் விபரங்களை வெளியிட முடியாது என்றும் விமானப்படை கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
