இலங்கை கடற்படையினர் மீது நாகப்பட்டினம் கடற்றொழிலாளர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடற்றொழிலாளர்கள், இலங்கையின் கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டதாக முறையிட்டுள்ளனர்.
தமிழக ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
சம்பவம்
தாம், கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டதாக, செருத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது, இலங்கை கடற்படையினர் தங்கள் படகை, இந்திய மீன்பிடி படகுடன்; மோதி, 2.6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள், ஒரு ஜிபிஎஸ் சாதனம், ஒரு வோக்கி-டோக்கி மற்றும் பிற உபகரணங்களை பறிமுதல் செய்ததாக அவர் முறையிட்டுள்ளனர்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தமிழக அரசாங்கம் மற்றும் இலங்கை கடற்படையினரின் தரப்பில் இருந்து கருத்துக்கள் எவையும் வெளியிடப்படவில்லை.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
