இலங்கை கடற்படையினரால் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 9 கடற்றொழிலாளர்களையும், எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக வீசி வந்த சூறைக்காற்று காரணமாக கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி சீட்டு இரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று (22) மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று(23) அதிகாலை சுமார் 2 மணியளவில் இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லைக்கும் நெடுந்தீவுக்கும் இடையே கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 9 இந்திய கடற்றொழிலாளர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களிடம் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டு பின் யாழ்ப்பாணம் கடற்றொழில்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், விசாரணைக்கு பின் 9 பேரும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri