இலங்கை முஸ்லிம்களை மடையர்கள் என நினைத்து விட்டார்கள்! - அமீர் அலி
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் மடையர்கள் என்று நினைத்து கொண்டு முஸ்லிம் ஜனாஸா பெட்டிகளை எரித்ததாக கூறிகின்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஒரு சில அரசியல்வாதிகள் கல்குடாப் பிரரேசத்திற்கு துரோகம் செய்துள்ளனர்.
அத்தோடு உலமாக்கள் மற்றும் படித்தவர்கள் கல்குடா அரசியலுக்கு துரோகம் செய்துள்ளனர். இவர்கள் அரசியலை பணமாக்கியதன் பலம் இத்தனை ஜனாசாக்கள் எரிக்கப்படடது.
இந்த நாடு முஸ்லிம்களை போட்டு சின்னா பின்னமாக்குகின்றது. இந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை இவ்வளவு கேவலப்படுத்துகிறது, இன்னும் முஸ்லிம்களை கேவலப்படுத்த போகும் நிலைமை உள்ளது என்றார்.





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
