வெளிநாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல் - கொழும்பில் அம்பலமாகும் உண்மைகள்
கொரியாவில் 23 வருடங்களுக்கு முன்னர் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
17 வயதுடைய கொரிய நாட்டு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழங்கு கொழும்பு மேல் நீதிமன்றதில் வீடியோ தொழில்நுட்பம் ஊடாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையர் ஒருவர் வெளிநாட்டில் செய்த குற்ற செயல் தொடர்பிலான குற்றச்சாட்டிற்கு எதிராக இலங்கையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் இர்ஷாடின் முன்னால் இந்த வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 3 மணி நேரம் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
