அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் இலங்கையில் தயாரிக்கப்படும் முச்சக்கரவண்டி
இலங்கை தயாரிக்கப்படும் முதல் மின்சார முச்சக்கரவண்டியான வேகா இலத்திரனியல் முச்சக்கரவண்டி அண்மையில் பன்னலையில் உள்ள சர்வதேச கார் ஓட்டப் பந்தய ஓடு தளத்தில் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார முச்சக்கரவண்டியை எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வேகா இனோவேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி பேஷான் குலபால தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சாதாரண முச்சக்கரவண்டியை விடக் குறைந்த விலைக்கு இந்த முச்சக்கரவண்டியை விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2027ஆம் ஆண்டளவில் சர்வதேச ரீதியாக இது 32 பில்லியன் பெறுமதியான தொழிற்துறையாக மாறும் எனவும், இதில் 10 வீதத்தை கைப்பற்றுவதே தமது இலக்கு எனவும் குலபால குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam