ஆறு சபைகளுக்கும் கூட்டணியாக களமிறங்கும் இ.தொ.கா (Photos)
எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறு சபைகளுக்கு தனித்து சேவல் சின்னத்திலும், யானை சின்னத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது.
இதற்கான வேட்புமனுக்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் நேற்று (21.01.2023) தாக்கல் செய்யப்பட்டன.
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சிசபைத் தேர்தல் மார்ச் 09 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு நேற்று (21.01.2023) அறிவித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
இந்த நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 சபைகளிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை பிரதான அரசியல் கட்சிகள் நேற்று (21.01.2023) தாக்கல் செய்துள்ளன.
குறித்த வேட்பு மனுக்கள் நேற்று நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் மொத்தம் 12 உள்ளாட்சிசபைகள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் சில சுயேட்சைக்குழுக்கள் ஆகியனவும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறு சபைகளுக்கு தனித்து சேவல் சின்னத்திலும், 6 சபைகளுக்கு கூட்டணியாக யானை சின்னத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, யானை சின்னத்திலும் போட்டி
இவற்றுக்கான வேட்புமனுக்கள் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் நேற்று (21.01.2023) தாக்கல் செய்யப்பட்டன.
இதன்படி, நுவரெலியா, அக்கரப்பத்தனை, கொட்டகலை, மஸ்கெலியா, நோர்வூட் ஆகிய பிரதேச சபைகளுக்கும், தலவாக்கலை - லிந்துலை நகர சபைக்கும் சேவல் சின்னத்தில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.
மேலும், நுவரெலியா மாநகரசபை, அட்டன் - டிக்கோயா நகரசபை, அம்பகமுவ பிரதேச சபை, வலப்பனை பிரதேச சபை மற்றும் கொத்மலை பிரதேச சபை, ஹங்குராங்கெத்த பிரதேச சபை ஆகியவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan
