வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் மரணம்
பெர்முடாவில் இலங்கை இளைஞன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
30 வயதுடைய டிலான் சித்ரானந்த என்ற இலங்கை இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பெர்முடா பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை மாலை 4:10 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் பெர்மூடா வடக்கு கடற்கரை வீதியில் தனது காரை ஓட்டிச் சென்றபோது, மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில், இலங்கை இளைஞன் ஓட்டிய கார் கவிழ்ந்துள்ளது. இதனால் அவர் அவரது வாகனத்திற்கு அடியில் சிக்கியுள்ளார்.
பெர்முடா தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பெர்முடா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri