சுவிட்சர்லாந்தில் இசையில் கலக்கும் இலங்கைப்பெண்
கொரோனா காலகட்டம் கலைஞர்களுக்கு கடினமான ஒன்றாக இருந்த நிலையில், உள்ளூர் கலைஞர்கள் தற்போது வெளிநாடுகளில் மீண்டும் பிஸியாகத் துவங்கியுள்ளார்கள்.
இலங்கை ரசிகர்களால் Suzi Croner என்று அழைக்கப்படும் Suzi Fluckiger, இப்போது, தான் வாழும் சுவிட்சர்லாந்தில் மீண்டும் பரபரப்பாக நிகழ்ச்சிகளை நடத்தத் துவங்கியுள்ளார்.
Suzi க்கு நிகழ்ச்சிகள் நடத்த பல வாய்ப்புகள் வந்தாலும், தான் சுவிட்சர்லாந்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதை விரும்புவதாக தெரிவிக்கிறார். சொல்லப்போனால், Suziயின் பெயர் சுவிஸ் செய்தித்தாள் ஒன்றிலும் வந்துவிட்டது.
இந்த ஆண்டின் இறுதி வாக்கில் இலங்கையில் கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருந்தார் Suzi.
ஆனால், இப்போது இலங்கையில் காணப்படும் சூழல் காரணமாக அதைக் கொஞ்சம் ஒத்திவைத்திருக்கிறார்.
Suziயின் கணவரான Thomas William Fluckiger, நுரையீரல் புற்றுநோயால் சமீபத்தில் இயற்கை எய்தியது குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
