இலங்கை கால்பந்து வீரர் ஒருவருக்கு 2,000 டொலர் அபராதம்
பாலஸ்தீன ஆதரவு செய்தியைக் காண்பித்தமைக்காக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு இலங்கை கால்பந்து வீரர் மொஹமட் தில்ஹாமுக்கு 2,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.
கொழும்பில் கடந்த ஜூன் 10 ஆம் திகதியன்று நடந்த ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஆசிய கிண்ண தகுதிச் சுற்றில் சீன தாய்பேயை இலங்கை 3–1 என்ற கணக்கில் வெற்றிக்கொண்டது.
2,000 டொலர் அபராதம்
இந்த போட்டிக்குப் பின் வெற்றி கொண்டாட்டத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
போட்டியில் பங்கேற்காத மாற்று வீரரான தில்ஹாம், "சுதந்திர பாலஸ்தீனத்துக்காகபிரார்த்தனை செய்யுங்கள்" என்று எழுதப்பட்ட சட்டையை அணிந்திருந்தார்.
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு இந்தச் செயலை விளையாட்டு விதிமுறைகளை மீறுவதாகக் கருதி அபராதங்களை விதித்துள்ளது.
தில்ஹாமுக்கு அபராதம் செலுத்த ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.



