இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடும் இலங்கைத்திரைப்படம்!
இந்திய சர்வதேச திரைப்பட விழா, 53ஆவது பதிப்பில், இலங்கையின் அருணா ஜெயவர்த்தன இயக்கிய “மரியா: தி ஓஷன் ஏஞ்சல்” என்ற திரைப்படம் (2022) தங்க மயில் விருதுக்காக போட்டியிடுகிறது.
நடுக்கடலில் மீனவர்கள் கூட்டமாகச் சென்று அவர்கள் செய்யும் தற்செயலான கண்டுபிடிப்பை இந்தப்படம் சித்தரிக்கிறது.
இலங்கைக்கு விருது கிடைக்குமா?
முன்னதாக இந்திய திரைப்பட விழாவில், ஒரு சிறப்புத் திரைப்படத்திற்கான முதல் தங்க மயில் விருது இலங்கை சினிமாவின் தந்தையாகக் கருதப்படும் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸால் இயக்கப்பட்ட கம்பெரலிய (1963) திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் 53வது பதிப்பில் இலங்கைக்கு விருது கிடைக்குமா? ஏன்பதை அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
1952இல் நிறுவப்பட்ட இந்திய சர்வதேச திரைப்பட விழா, ஆசியாவின் மிக முக்கியமான
திரைப்பட விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
திரைப்படங்கள், அவை சொல்லும் கதைகள் மற்றும் அதற்குப் பின்னால் உள்ளவர்களைக் ஊக்குவிப்பதே இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நோக்கமாகும்.
இலங்கையில் சினிமா அறிமுகம்
இந்த விழா, ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் கோவாவின் பொழுதுபோக்குச் சங்கம், கோவா அரசாங்கத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
1901 ஆம் ஆண்டு இலங்கையில் சினிமா அறிமுகமானது. பிரித்தானிய ஆளுநர் வெஸ்ட் ரிட்ஜ்வே மற்றும் இரண்டாம் போயர் போரின் கைதிகள் குறித்த திரைப்படம் இலங்கையில் முதல் முறையாக திரையிடப்பட்டது.
போயர் போரில் பிரித்தானியாவின் வெற்றி, விக்டோரியா மகாராணியின் அடக்கம் மற்றும் எட்வர்ட் 3ஆம் மன்னரின் முடிசூட்டு விழா ஆகியவற்றை ஆவணப்படுத்திய குறும்படம் இதுவாகும்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 11 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
