கனடாவில் இலங்கையர்களை கொடூரமாக கொலை செய்தவருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை
கனடாவில் இலங்கை குடும்பத்தை கொலை செய்த சந்தேக நபரின் YouTube கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் வீடொன்றில் வைத்து 6 பேரைக் கொன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இலங்கை மாணவன் 19 வயது பேப்ரியோ டி சொய்சா தொடர்பில் மேலும் பல தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் YouTube கணக்கு தொடர்பான விபரங்களும் வெளியாகியுள்ளது.
குறித்த இளைஞன் Minecraft வீடியோ கேம் வீடியோ விளையாட்டிற்கு அடிமையானவராகும். அவர் அதனை Minecraft வீடியோவாக வெளியிடுவதில் பிரபலமடைந்துள்ளார்.
YouTube நடவடிக்கை
இந்நிலையில் இந்த கணக்கை கண்டுபிடித்த அதிகாரிகள் அதனை நீக்கியுள்ளதாக YouTube நிர்வாக அதிகாரி மின்னஞ்சல் ஊடாக செய்தி சேவைக்கு அறிவித்துள்ளார்.
“ஒட்டாவாவில் நடந்த கொலைச் சம்பவத்தை தொடர்ந்து, சந்தேக நபருடன் தொடர்புடைய YouTube கணக்கு அடையாளம் காணப்பட்டு, எங்கள் வழிகாட்டுதல்களின்படி நிறுத்தப்பட்டது.
வீடியோ கேம்
ஒரு பயனரின் தளத்திற்கு வெளியே உள்ள நடத்தை YouTube சமூகத்திற்கு தீங்கு விளைவித்தால், நாங்கள் நடவடிக்கை எடுக்கலாம். அவரது YouTube கணக்கில் Minecraft வீடியோ கேம் தொடர்பான பதிவேற்றங்கள் இடம்பெற்றன.
அவை வன்முறையான விளையாட்டாகும். மேலும், அவை வழங்கப்படும் விதம், அவர் ஒரு வீடியோ கேம் அடிமையாக இருப்பதாக கருதலாம்” என YouTube நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
