கனடாவில் இலங்கை குடும்பத்தை கொலை செய்த இளைஞன் - குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு
கனடாவில் இலங்கை சேர்ந்த இளைஞன் கொலை குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட நிலையில், குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கனேடிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்ற 20 வயதான டி சொய்சா என்ற இலங்கை இளைஞனை குற்றவாளியாக ஓட்டா நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குற்றவாளிக்கான தண்டனை
கொலை வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்ற போது, தனது குற்றத்தினை டி சொய்சா ஒத்துக்கொண்ட நிலையில் வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது.

அடுத்து வரும் வழக்கு விசாரணையின் போது குற்றவாளிக்கான தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. கடந்த வருடம் ஒட்டாவில் வசித்த வந்த இலங்கை குடும்பம் ஒன்றை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர்.
டி சொய்சா என்ற இளைஞனால் அவர்கள் கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்போது தாய் மற்றும் அவரின் நான்கு பிள்ளைகள் உட்பட ஆறு பேர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
கொலை செய்யப்பட்ட குடும்பத்தினரின் வீட்டில் டி சொய்சா தங்கியிருந்த நிலையில், இந்த கொலைகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan