பிரித்தானியாவில் இலங்கையருக்கு எதிராக இனவெறி தாக்குதல்
பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக இனவெறியுடன் செயற்பட்ட நபருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
பிபிசி செய்திச் சேவையில் பணியாற்றிய நிஹால் அர்தநாயக்க என்ற இலங்கையரை தகாத வார்த்தைகளால் 60 வயதான கிரஹாம் குரோவ்ஸ் திட்டியுள்ளார்.
குறித்த நபர் நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் நிலையில் நீதிமன்றம் 400 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது.
கடுமையான எச்சரிக்கை
கடந்த 2023 ஆம் ஆண்டு கிரேட்டர் மென்செஸ்டரில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது.
மதுபோதையில் கிரஹாம் குரோவ்ஸ் மிகவும் மோசமாக செயற்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் போதையில் இருந்தமையால் அது தனக்கு ஞாபகம் இல்லையென தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையுடன் அவருக்கு அபராதம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri