சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி
இலங்கையை பூர்வீகமாக கொண்ட சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினரான பரா ரூமி, அந்நாட்டின் தேசிய சட்டமன்றத்தின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வரலாற்றில் முதல் முறையாக இலங்கையர் ஒருவர் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தில் உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
34 வயதான பரா ரூமி தொழில் ரீதியாக ஒரு செவிலியர் மற்றும் மருத்துவ நிபுணர் ஆவார். அவர் சுவிட்சர்லாந்தின் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராகும்.
இலங்கைப் பெண்
கொழும்பு பிஷப் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை பயின்ற பரா, 1998 ஆம் ஆண்டு தனது 6 வயதில் தனது குடும்பத்துடன் சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்தார்.

2021 ஆம் ஆண்டு கிரென்சென் நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அவர் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
மேலும் அவரது தற்போதைய நியமனத்துடன், 2027 ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் 2028 ஆம் ஆண்டு சுவிஸ் நாடாளுமன்றத்தின் தலைவராக வருவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சம வாய்ப்புகள்
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, அவர் முக்கியமாக சுகாதாரக் கொள்கை, சமூகக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகள் போன்ற பிரச்சினைகளில் வாதிடுகிறார்.

கூடுதலாக, அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் அமைப்புகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தனது சொந்த நாடான இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam