ரம்புக்கனை தாக்குதல் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்
ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.
எரிபொருள் கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர், ரம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து தாம் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு எப்போதும் மிகுந்த மரியாதையுடன் சேவையாற்றும் இலங்கை பொலிஸாரால் பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“போராட்டக்காரர்கள் தங்கள் குடிமை உரிமையில் சம மரியாதை மற்றும் கெளரவத்துடன் ஈடுபட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.