வெளிநாடொன்றில் வாகனத்தில் உயிரிழந்த இலங்கையர்
கட்டாரில் சாரதியாக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் அவர் பயணித்த வாகனத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளத்தை சேர்ந்த 48 வயதான மொஹமட் அன்வர் மொஹமட் ஷிப்லி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இலங்கையிலுள்ள குடும்பத்தினரின் தகவலுக்கமைய, அவர் சுமார் 22 ஆண்டுகளாக கட்டாரில் சாரதியாக பணிபுரிந்து வருகிறார், கடைசியாக அல் பர்டான் நகரில் பணியாற்றியுள்ளார்.
பொலிஸாரிடம் முறைப்பாடு
மொஹமட் பணியாற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் அவரை தொடர்பு கொண்ட போதும், அவர் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அல் பர்தான் பொலிஸாரிடம், அவர் பணியாற்றும் நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளது.
அதற்கமைய, அந்த நபர் ஓட்டிச் சென்ற டிரக் வீதியின் அருகே நிறுத்தியிருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
நோயினால் பாதிப்பு
வாகனத்தில் பாதுகாப்பு சீட் பெல்ட் அணிந்திருந்த ஓட்டுனரைக் கண்ட பொலிஸ் அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த மொஹமட் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.