அவுஸ்திரேலியாவில் கோர விபத்து : ஸ்தலத்தில் பலியான இலங்கையர்
அவுஸ்திரேலியாவில் சம்பவித்த வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டாஸ்மேனியாவின் Travellers Rest உள்ள Bass நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 28 வயதான தாரக விஜேதுங்க என்பவர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இலங்கையர் பலி
உயிரிழந்தவர் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டவர் என தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த இடத்திலேயே இலங்கையர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து மெர்சிடிஸ் பென்ஸ் காரின் ஓட்டுநர் போதைப்பொருள் மற்றும் மது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மது சோதனை
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் 4வது வேட்பாளராக தாரக விஜேதுங்க போட்டியிட்டு 21,200 வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.





Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
