வெளிநாட்டுக்கு வேர்க் விசாவில் சென்ற இலங்கை தமிழர் கோர விபத்தில் பலி
இஸ்ரேலில் பணியில் இருந்த போது இலங்கையர் ஒருவர் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இலங்கையரின் பூதவுடலை நாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.
43 வயதான அந்தோணி ஞானபிரகாசம் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மத சடங்குகள் மற்றும் இறுதி மரியாதை
அவர் கொழும்பு, முல்லேரியா நியூ டவுனில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமான துறையில் வேலை செய்வதற்காக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் அவரது பூதவுடலை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் பூதவுடலை இலங்கைக்கு அனுப்புவதற்கு முன் மத சடங்குகள் மற்றும் இறுதி மரியாதைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி இஸ்ரேலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.



